அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடலுக்கு பென்னிகுவிக் பெயரை வைக்கலாமே..? CM ஸ்டாலினுக்கு பெருந்தன்மை வருமா..? ஆர்.பி.உதயகுமார் கேள்வி

Author: Babu Lakshmanan
12 January 2024, 12:52 pm

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, தன் சொத்துகளை எல்லாம் விற்று முல்லைப் பெரியார் அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பெயரை முதலமைச்சர் பெருந்தன்மையுடன் சூட்டுவரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் என்று சொன்னால் உலக புகழ்பெற்ற  ஜல்லிக்கட்டு. அதேபோல தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அடையாளமாக இருக்கிற மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையாகும். இது தென் மாவட்டங்களில் உள்ள ஆலைகளிலே மிகவும் முக்கியமானது என்று எல்லோரும் அறிந்தாகும்.

தற்போது அலங்கநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுமா என்று கண்ணீரோடும், கவலையோடும் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். தற்போது, 20 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாத சம்பள நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும், புதிதாக ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற இந்த அரசு அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறப்பதற்கு முன்னுரிமை வழங்குமா..? அல்லது முக்கியத்துவம் வழங்கமுன் வருமா..? என்று இந்த பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றார்கள் 

இதில் நேரடியாக பத்தாயிரம் பேர், மறைமுகமாக ஒரு லட்சம் பேர்களும் பயன் பெற்று வருகின்றனர் மதுரை, விருதுநகர்  தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை கொண்டு வருவகிறார்கள்.

எடப்பாடியார் ஆட்சி காலத்தில் நிர்வாக வசதிக்காகவும், பராமரிப்புக்காகவும், சம்பளத்திற்காகவும் 22 கோடி வழங்கினார். ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தலில் அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை இயக்கப்படும் என்று கூறினார்கள். ஆலை சீரமைப்பு, பணியாளர்கள் சம்பளம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து ஆலையை மீண்டும் இயக்க தற்போது 26 கோடி 50 லட்சம் தேவைப்படுகிறது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 50 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க முன்வரும் அரசு சக்கரை ஆலையை மீண்டும் இயக்க முன்வருமா என விவசாயிகள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஜல்லிகட்டுக்கு மைதானம் அமைத்து அதற்கு கருணாநிதி பெயரை சூட்ட இருப்பதாக செய்திகளை அமைச்சர்கள் வெளியிட்டு வருகிறார்கள். தென் மாவட்ட மக்களுடைய விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையைகட்டி, இனி எத்தனை தலைமுறைகள் ஆனாலும் குடிநீருக்கும், விவசாயத்துக்கும், பற்றாக்குறை இல்லாத ஒரு நிலை உருவாக்கி விவசாயிகளின் இதயங்களில் தெய்வமாக இருக்கிற கர்னல் ஜான் பென்னிகுயிக் பெயரை அலங்காநல்லூரில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பெயரை சூட்ட அரசு முன்வருமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அதை திறப்பதற்கு வரும் முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் ஏதேனும் கவனம் செலுத்துவாரா? நடவடிக்கை எடுப்பாரா என்று காத்திருக்கின்றார்கள். கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைப்பட இருந்த அந்த இடத்திலே இன்றைக்கு மைதானம் அமைத்திருக்கிறீர்கள். அதில் உங்கள் தந்தையார் பெயரை சூட்ட வேண்டும் என்று அமைச்சர்கள் எல்லாம் அறிவித்து கொடுத்து வருகிறார்கள். ஆனால் நீங்கள் பெருந்தன்மையோடு தென் மாவட்ட விவசாயிகளுடைய இந்த வாழ்வாதாரத்துக்கு முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த சொத்துகளை விற்று கட்டிக்கொடுத்த கர்னல் ஜான் பின்னிக்கு பெயரை சூட்டுவீர்களா?

கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு அம்மா ஆட்சிக்காலத்தில் மணிமண்டபம் அமைத்து தரப்பட்டது அது தற்போது வருகின்ற பொங்கல் அன்று அவரது பிறந்த நாளில் இதை அறிவிப்பீர்களா? இதேபோன்று எடப்பாடியார் ஆட்சியில் இருந்திருந்தால் விவசாயிகள் கோரிக்கை வைத்த செய்தியை கேட்டிருந்தால் உடனடியாக அதை நிறைவேற்றி இருப்பார். ஆகவே நீங்களும் பெருந்தன்மையோடு வரலாற்றை புனிதப்படுத்த பென்னிகுக் பெயரை சூட்ட வேண்டும்.

அதேபோல் யாருமே கேட்காத மைதானத்திற்கு முக்கியத்துவம் தரும் நீங்கள் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறந்து தொழிலாளர் வாழ்வாதாரத்திற்கு புதிய நடவடிக்கை எடுக்க முன்னுரிமை அளிப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 316

    0

    0