மதுரை கலைஞர் நினைவு நூலக கட்டிடப் பணியின் போது அதிர்ச்சி : மாடியில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி…!!

Author: Babu Lakshmanan
1 August 2022, 2:31 pm

மதுரை கலைஞர் நினைவு நூலக கட்டிடப் பணி மாடியில் இருந்து விழுந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலக கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இன்று கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இக்பால் என்ற கட்டிட தொழிலாளி மாடியில் இருந்து தவறி விழுந்து பலியாகி உள்ளார்.

அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இது குறித்து மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!
  • Close menu