மதுரையில் தலைதூக்கும் நள்ளிரவு பைக் ரேஸ்… சாலையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்… கண்டுகொள்ளுமா காவல்துறை?

Author: Babu Lakshmanan
12 October 2022, 2:14 pm

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் நள்ளிரவு பைக் ரேஸ் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

சென்னையைத் தொடர்ந்து மதுரை மாநகர் பாண்டி கோவில் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் சாலையை மறித்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி வாலிபர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பாண்டி கோவிலில் இருந்து கோமதிபுரம் செல்லக்கூடிய சாலையில் பைக்குகளில் அதிவேகமாக சென்று வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். பொதுவாக, சென்னையில் தான் விதிகளை மீறி இதுபோன்ற பைக் ரேஸ்கள் நடத்தப்படுவது வாடிக்கையாகும். இந்த நிலையில், மதுரையிலும் நள்ளிரவு பைக் ரேஸ் கலாச்சாரம் தலைதூக்குவது வேதனை அளிப்பதாக உள்ளது.

பைக் ரேஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்ற வாலிபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

https://player.vimeo.com/video/759427347?h=1dfb60e640&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Simbu 51st movie update மன்மதனே நீ காதலன் தான்…காதலின் கடவுளாய் STR…கட்டம் கட்டி களமிறங்கிய FIRST LOOK..!