களைகட்டிய உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு : சீறிப்பாயும் காளைகளும்.. திமிரும் காளையர்களும்..

Author: Babu Lakshmanan
16 January 2023, 10:20 am

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று மாட்டுப்பொங்கல் அன்று மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்களும், 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காளைகளுக்கான ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை முடிந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!