SDPI மதுரை மாநாட்டின் மூலம் இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்… விழிபிதுங்கும் திமுக… குரல்வளையை நெருக்கும் கூட்டணி கட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
10 ஜனவரி 2024, 4:45 மணி
Quick Share

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்துடன், மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே அண்மையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடானது, மதுரையை மிரள வைக்கும் வகையில் நடந்து முடிந்தது.

சுமார் 100 ஏக்கரில் அமைந்த திடலில் 48 ஏக்கரில் மாநாட்டுக்கான மேடை மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டன. அதேபோல, சுமார் 20 ஏக்கரின் வாகனங்களின் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டது. அந்த இருக்கைகள் நிரம்பி வழிந்ததுடன், திடலுக்கு வெளியேயும் மக்கள் கூட்டம் அலைமோதியது. திரளான பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமின்றி, திமுக கரை வேட்டிகளும் இந்த மாநாட்டில் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.

எதிர்பார்த்ததை விட பெருவாரியான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததாகவும், உண்மையில் நாங்களே இந்த அளவுக்கான கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்று கட்சி நிர்வாகியே ரொம்பவும் பெருமையாக சொன்னார். மேலும், கூட்டத்திற்கு வந்திருந்த முக்கியஸ்தர்களும் திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி பேசினர்.

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டாலின் நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியை நம்பியே, இஸ்லாமிய மக்கள் அவருக்கு ஓட்டு போட்டதாகவும், ஆனால், குறைந்தபட்ச வாக்குறுதியை கூட அவர் நிறைவேற்றவில்லை என்று ஆதாங்கத்துடன் அந்த நிர்வாகி கூறியிருந்தார்.

அதேபோல, மேடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினரைப் போல வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்ற மாட்டோம் என்றும், இஸ்லாமிய மக்களுக்கு எப்போதும் அரணாக இருப்பது அதிமுக மட்டுமே என்று அடிக்கடி கூறி கூட்டத்தின் கரகோஷத்தை பெற்றார். மேலும், இனி எப்போதும் பிஜேபியுடன் கூட்டணி கிடையாது என அவர் தனது உரையில் அழுத்தந் திருத்தமாக குறிப்பிட்டார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்த திமுகவின் ஆட்சியின் மீதான இஸ்லாமியர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவே, எடப்பாடி பழனிசாமி பேச்சின் போது எழுந்த கைதட்டல்களும், கரகோஷங்களும் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பாஜகவுடன் இனி ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என அவர் கூறியிருப்பதன் மூலம், திமுக பக்கம் இருக்கும் இஸ்லாமிய வாக்குகளை அதிமுக மடைமாற்றம் செய்யும் விதமாகவே இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.

கூட்டணி விவகாரத்தில் அதிமுகவின் சீனியர்களின் எச்சரிக்கையை மீறி எடப்பாடி பழனிசாமி எடுத்த துணிச்சலான முடிவும், அவர் போட்ட தேர்தல் கணக்கும் தப்பவே இல்லை என்பதை மதுரை SDPI மாநாடு உறுதி செய்தது. இந்த மாநாட்டின் மூலம் இஸ்லாமிய வாக்குகள் திமுவுக்கு குறையும் என்பதையும் கடந்து, மறைமுகமாக வேறு சில நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

அதாவது, SDPI மாநாட்டின் வெற்றியை சுட்டிக் காட்டி, திமுக அணியில் உள்ள பிற இஸ்லாமிய அமைப்புகளும், கட்சிகளும் தேர்தல் பேரத்தை உயர்த்திருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது, அவசர அவசரமாக சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களையும், சலுகைகளையும் வெளியிட்டு வருவதாக பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 294

    0

    0