ஒரே ரவுண்டில் 12 காளைகளை அடக்கிய ‘மதுரை’ வீரன்: கோவை ஜல்லிக்கட்டில் தங்ககாசுகளை அள்ளி கவனம் ஈர்த்த இளைஞர்!!

Author: Rajesh
21 January 2022, 1:00 pm

கோவை: கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒரே சுற்றில் 12 காளைகளை அடக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டிகளை நடைபெற்று வருகின்றன. தற்போது 5 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. மொத்தமாக 500 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

நான்காம் சுற்றில் மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற வீரர் கலந்து கொண்டு விளையாடினார். இவர் ஒரே சுற்றில் 12 காளைகளை அடக்கி 12 தங்கக் காசுகள், அண்டா, எல்.இ.டி., டி.வி, கைக்கடிகாரம் ஆகிய பரிசுகளை வென்றுள்ளார்.

மேலும், சுற்றின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட பிரபாகரனுக்கு சிறப்பு பரிசாக அமைச்சர் செந்தில் பாலாஜி சைக்கிள் ஒன்றை வழங்கினார். பிரபாகரன் இந்தாண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்றவர்.

இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், “நான் தொடர்ந்து 3 முறை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்துள்ளேன். இதுவரை வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற 12க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் வென்றுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!