மதுரையில் கல்லூரி மாணவிகளிடம் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட ஒரு மாணவியின் தந்தை சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக கல்லூரி மாணவிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் கடந்த மாதம் ஒரு கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக, ஈரோட்டில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவியின் கழுத்தை ஒரு இளைஞர் பிளேடால் அறுத்தார். காதல் தகராறு காரணமாக இந்த செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, மதுரையில் கடந்த சில நாட்களாகவே மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு இளைஞர்கள் அடாவடியில் ஈடுபடுவதை காண முடிகிறது. மூன்று தினங்களுக்கு முன்பு நரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்குள் புகுந்து சில இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு சென்று அந்த இளைஞர்களை கைது செய்தனர். இந்த சூழலில், மதுரையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது அதிரச்சியடைய செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மகளிர் கல்லூரிக்குள் புகுந்து சில இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மதுரை நேற்று மாலை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தியில் இறுதி ஊர்வலம் ஒன்று சென்றது. அந்த ஊர்திக்கு பின்னால் மதுபோதையில் ஆட்டம், பாட்டத்துடன் சென்ற இளைஞர்கள் சிலர், கோரிபாளையத்தில் உள்ள மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிக்கு முன்பு இந்த அமரர் ஊர்தி வந்தபோது, அங்கிருந்த மாணவிகளை அந்த இளைஞர்கள் கிண்டல் செய்தனர்.
அப்போது, இதனை தட்டிக்கேட்ட ஒரு மாணவியின் தந்தை, “ஏன் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்கள்” என இளைஞர்களிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை காலால் எட்டி உதைத்தும், ஹெல்மெட்டுகளை கொண்டும் அடித்தனர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதை பார்த்த மாணவிகள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து, பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.