மளமளவென குறைந்த தமிழக கொரோனா : தினசரி பாதிப்பில் கைகோர்க்கும் சென்னை, கோவை
Author: kavin kumar13 February 2022, 8:15 pm
சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 2,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500க்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 36 ஆயிரத்து 262ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 41ஆயிரத்து 699ஆக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 11 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,915 ஆக அதிகரித்துள்ளது. 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 915ஆக அதிகரித்துள்ளது. இன்று 8,229 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 56ஆயிரத்து 648ஆக அதிகரித்துள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 461 பேருக்கும், கோவையில் 432 பேருக்கும், செங்கல்பட்டில் 208 பேருக்கும், திருப்பூரில் 113 பேருக்கும், சேலத்தில் 109 பேருக்கும், ஈரோட்டில் 134 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.