கடத்தப்பட்ட ஆண் குழந்தை: துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறை: அதிர்ச்சியடைய வைத்த காரணம்….!!

Author: Sudha
10 August 2024, 8:44 am

சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை நேற்று 40 வயது பெண் ஒருவர் கடத்திச் சென்றார். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குழந்தையை பெண் கடத்திச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

இந்நிலையில் கடத்திச்சென்ற பெண்ணை இன்று போலீசார் கைது செய்தனர். கடத்திய பெண்ணின் பெயர் வினோதினி என தெரியவந்துள்ளது.

குழந்தையை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தனக்கு குழந்தை இல்லை என்பதற்காக குழந்தையை கடத்தினார் என்பது தெரிய வந்தது.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 251

    0

    0