அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு : தடையுடன் நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2024, 2:01 pm

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு : தடையுடன் நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!

தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்புக்கு எதிராக ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சரியான காரணங்களை ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார்.

எனவே, சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (ஏப்.,8) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடியும் வரை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 310

    0

    0