மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை ; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!!
Author: Babu Lakshmanan22 October 2022, 12:03 pm
சென்னை : சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் ராயப்பன் ஷாஜி ஆண்டனி. இவர் சோழவரம் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 8 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்த முயன்ற போது போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டினார்.
பின்னர், அவரை கைது செய்து அயப்பாக்கத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அப்போது, 3வது மாடியில் இருந்த ராயப்பன், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையில், சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், அவமானம் தாங்காமல் அவர் இந்த முடிவை எடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.