காதல் திருமணம் செய்த மகன் ஆணவக் கொலை.. மருமகள் மற்றும் தாய்க்கும் அரிவாள் வெட்டு.. கிருஷ்ணகிரியை அதிர வைத்த சம்பவம்!!

Author: Babu Lakshmanan
15 April 2023, 10:22 am

கிருஷ்ணகிரி ; ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை ஆணவ கொலை செய்த தந்தை, தடுக்க வந்த தாயையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 47). இவரது மகன் சுபாஷ் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பணிபுரியும் இடத்தில் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணி, மகன் மற்றும் மருமகளை வீட்டிற்கு அழைத்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த தாய் கண்ணம்மாள் அவரையும் வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் மகன் சுபாஷ் (22). சுபாஷின் பாட்டி கண்ணம்மாள் (65) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மருமகள் அனுசுயா (25) உயிருக்கு போராடும் நிலையில் படுகாயங்களுடன் இருந்தவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிபதி அமர்ஆனந்த், உயிருக்கு போராடும் நிலையில் உள்ள அனுசுயாவிடம் மரண வாக்குமூலத்தை பெற்றார். சம்பவ இடத்தில் ஊத்தங்கரை டிஎஸ்பி அமல அட்வின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Maharaja movie box office in China பிராமண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 572

    0

    0