விரக்தியில் எடுத்த முடிவு:கொலையில் முடிந்த குடும்ப சண்டை: மனைவி மாமியாரை வெட்டிக்கொன்ற நபர்…!!

Author: Sudha
17 August 2024, 10:08 am

கேரளாவில் குடும்பச் சண்டை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வளஞ்சேரியை சேர்ந்த சாகுல் ஹமீதும், அவரது மனைவி செல்மாவும், குடும்பச் சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கோடாரி மற்றும் அரிவாளுடன் கண்ணூரில் உள்ள மனைவியின் வீட்டுக்குள் அடாவடியாக புகுந்த சாகுல் ஹமீது, மனைவி செல்மா மற்றும் மாமியார் அலிமா ஆகியோரை வெட்டிப் படுகொலை செய்தார்.

இதில் சாகுல் ஹமீதும், அவரது 12 வயது மகனும் காயமடைந்த நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது.

2 பெண்களின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  • Sathyaraj family political problem கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!