வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது.
தீவிர புயலாக நகர்ந்து சற்றே வலு குறைந்து புயலாக இன்று இரவு கரையை கடக்கும். அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக மாற இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது.
இன்று நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், வேலூர் ராணிப்பேட்டை, கடலூர், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.