மங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவம் : பேருந்து நிலையத்தில் கைதான ஷாரிக்… வெளியானது புதிய சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
22 November 2022, 2:37 pm

கர்நாடகா ; மங்களூரூ குண்டுவெடிப்பில் சம்பவத்திற்கு முன்னதாக, ஷாரிக்கின் நடமாடிய புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. அதில், ஆட்டோவில் பயணித்த நபர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். உடனே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், இதனை தீவிரவாத தாக்குதல் என அறிவித்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காயமடைந்தவர் கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த முகமு ஷாரிக் (24) என்பது தெரிய வந்தது. மேலும், அவர் கோவையில் போலியான பெயருடன் தங்கியிருந்ததும், அங்கிருந்து பள்ளி ஆசிரியர் ஒருவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஷாரிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆட்டோ குக்கர் வெடித்து சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, குண்டுவெடிப்புக்கு முன்பாக ஷாரிக் நடமாடிய காட்சிகள் தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!