நாடாளுமன்றத்தில் மணிப்பூர் எம்.பி மவுனமா இருக்காரு… பிரதமரிடம் கேட்டால் 2 நிமிடம் பேசுகிறார் : சு.வெங்கடேசன் வருத்தம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 6:55 pm

இந்தாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் காரசாரமாக பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் மோடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலளித்தார்.

அப்போது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். ஒன்றரை மணி நேரமாக பிரதமர் மணிப்பூர் குறித்து பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கையில்லா தீர்மான தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு 16 மணி நேரம். அதில் பாஜகவுக்கு 8 மணி நேரம். வரிந்துகட்டி பேசினார்கள்.

ஆனால் ஆளுங்கட்சியின் மணிப்பூர் எம்பி பேசவில்லை. 2 நிமிடமாவது பேசச்சொல்லுங்கள் என்று கேட்டோம். பேசவில்லை. அதற்கு பதிலாக மணிப்பூர் பற்றி பிரதமர் 2 நிமிடம் பேசினார் என பதிவிட்டுள்ளார்.

  • Ajith racing and movies நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  • Views: - 266

    1

    0