சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் : போலீசார் அதிர்ச்சி தகவல்

Author: Udayachandran RadhaKrishnan
9 அக்டோபர் 2024, 7:58 மணி
Samsung Protest
Quick Share

சாம்சங் ஊழியர்கள் போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் : ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் சிஐடியூ சார்பில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு பலகட்ட வார்த்தைகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் இருந்த ஊழியர்கள் 7 பேரை காவல் துறையினர் நேற்று வீடுவீடாகச் சென்று கைது செய்தனர்.

நள்ளிரவில் சாம்சங் தொழிலாளர்கள் வீடுகளில் புகுந்து கைது செய்யும் போலீஸார்.
அதிகாலை போராட்டத்துக்கு வந்த ஊழியர்களிடம் அடையாள அட்டை உள்ளதா எனவும் சோதனை நடத்தினர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் மினி லாரியில் ஏறிச் சென்றபோது அந்த லாரி கவிழ்ந்து சிலர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஈடுபட்டபோது அவரையும், போலீஸாரையும், முத்துக்குமார், எலன், ஆசிக் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதனைத் தொடர்ந்தே ராஜபூபதி, ஆசிக் அகமது, பாலாஜி உள்பட 7 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்,என்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் போராட்டத்துக்கு வந்த ஊழியர்களை பேருந்திலேயே மறித்து காவல் துறையினர் அவர்கள் அடையாள அட்டையை காட்டும்படி சோதனை நடத்தினர். இதனால் பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசார் கூறுகையில்: சமூக விரோதிகள், மாவோயிஸ்ட்கள் தொழிலாளர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து இதை அரசுக்கு எதிரான போராட்டமாக திசை திரும்பவும், வன்முறையை தூண்டிவிடவும் முயற்சிப்பதால் இந்தச் சோதனை நடைபெறுகின்றனர் என்று தெரிவித்தனர்.

சாம்சங் ஊழியர்களின் இந்தப் போராட்டத்துக்கு திமுக தவிர்த்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உட்பட திமுக கூட்டணிக் கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தொழிலாளர் போராட்டத்தை முன்வைத்து போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் மோதல் போக்கு வலுத்ததால் சுங்குவார்சத்திரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. சாம்சங் ஊழியர்கள் கைது அப்பட்டமான காவல்துறை அத்துமீறல்சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில்
அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமாகியுள்ளது. இவ்வாறு சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் கைதுக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் காவலர்கள் சாம்சங்கின் காவலர்களாக மாறுவதை ஏற்க முடியாது.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி சென்று போலீஸ் கைது செய்துள்ளது.

தொழிற்சங்க உரிமை கேட்டு ஜனநாயக வழியில் போராடும் தொழிலாளர்கள் மீது மூர்க்கத்தனமாக காவல்துறை நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு மதுரை எம்பி சு.வெங்கடேசன்.எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிஐடியு தொழிற்சங்கம் கூறியிருப்பதாவது: பதிவு ஏன் என கேட்டு கோர்ட்டுக்கு போனது தொழிலாளர் நலத்துறையே. வேண்டுமென்றே பதிவு செய்ய மறுத்து இழுத்தடிப்பது தானே காரணம். சாம்சங் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என நிர்வாகத் தரப்பில் சொன்ன சொத்தை காரணத்தை தொழிலாளர் நலத்துறை தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன.

நீங்கள் பதிவு செய்துவிட்டால் கோர்ட்டுக்கு தேவையே இல்லையே. சங்கம் அமைக்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. சங்கப் பதிவு கேட்கும் உரிமையும் சட்டத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் தொழிலாளர் நலத்துறை பதிவு செய்ய மறுக்க. மறு பக்கம், பதிவு செய்யாத சங்கத்திடம் எப்படி பேச முடியும் என நிர்வாகம் கூறுகிறது.
இது ஜாடிக்கேற்ற மூடி தவிர வேறு என்ன.

சிஐடியு வந்துவிடக் கூடாது என நிர்வாகம் நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தொழிலாளர் நலத்துறைக்கும் அப்படித்தானோ என்கிற சந்தேகம் எழுகிறது. அறவழியில் போராட்டம் நடத்துபவர்களை நக்சலைட்டுகள் என்று கூறுவது என்ன நியாயம் என சி.ஐ.டி. யூ. கேள்வி எழுப்பியுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வந்த தொழிலாளர்களை, சங்க நிர்வாகிகளை
தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டனம் தெரிவித்துள்ளார். சாம்சங் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்புமாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் மிகவும் ஆட்சேபனைக்குரியது, நியாயமற்றது, சட்டத்திற்கு புறம்பானது.

ஒரு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்து பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை பெற்றுள்ளனர். இந்நிலையில் ஆளுநர் தனக்கு வேண்டிய 4, 5 பேர்களை அழைத்து மாநில மக்களுக்கு அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்ற வாக்குறுதியோடு ஒரு அரசை அமைக்க அழைத்தால் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதை ஏற்றுக் கொள்வாரா.
சாம்சங் நிர்வாகம் கூறுவதும் அமைச்சர் அதையே முடிவு என அறிவிப்பதும் எந்த வகையிலான நியாயம் என மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க திராணியின்றி, அடக்குமுறையால் தமிழக அரசு ஒடுக்க முயல்தாக எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது : காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் தி.மு.க., அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்.

போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டு கொண்டு, ‘நானும் தொழிலாளி’ என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் அவர்களுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறி உள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்களை சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் வெளியானது . இதற்கு பிறகு சங்கத்தின் 4 நிர்வாகிகள்/தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தொழிலாளர்கள் பந்தலுக்கு வராமல் தடுக்கும் வேலையை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

சாம்சங் வேலை நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை குறித்து அமைச்சர் ஊடக சந்திப்பில் பேசியது மிகவும் வருந்தத்தக்கது. நிர்வாகம், ஒரே ஒரு கோரிக்கையைத் தவிர அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டது, அந்த ஒன்று தொழிற்சங்கப் பதிவு பற்றி. அது கோர்ட்டில் இருக்கிறது, மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்ற முன்வந்ததும் கருணையினால் அல்ல, சிஐடியு தலைமையில் தொழிலாளிகள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தினால் தான் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. நிர்வாகத்திற்குப் புரியும் மொழி போராட்டம்தான். அந்த மொழியில் பேசியதால்தான் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்ற முன்வந்துள்ளது.
மூச்சுத் திணறுதுங்க.. முளியும் பிதுங்குதுங்க … கேட்டுக்குங்க ஜனங்கள் படும் பாடு…
வரம்பு மீறி வலுத்த கைகள் மக்கள் கழுத்தை நெரிக்குது…விருப்பம் போல நரிகள் சேர்ந்து வேட்டையாடிக் குவிக்குது…வெறிநாய்க்கு உரிமை வந்து வீட்டுக்காரனைக் கடிக்குது என கவிஞர் கல்யாணம் சுந்தரம் பாடியது நினைவுக்கு வருகிறது என்றனர்.

சாம்சங் போராட்டத்துக்கு திமுக வறிந்து கட்டி ஆதரவளித்து வருவது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. கம்யூனிஸ்டுகள் மீது முதல்வரும் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் கூட்டணி முறியும் சூழல் உருவாகும் நிலை போராட்டத்தின் முடிவில்தான் வெளிச்சமாகும்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 144

    0

    0