சசிகலாவுக்கு குறி? செம்மரம் கடத்தலில் வசமாக சிக்கிய பாஸ்கரன்.. விசாரணை வளையத்தில் முக்கியப்புள்ளி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 11:45 am

செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

செம்மரக் கடத்தல் வழக்கு தொடர்பாக இரவாரசியின் மகன் விவேக்கின் மாமனாரான பாஸ்கரிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அண்ணாநகரில் வசித்து வரும் சசிகலாவின் உறவினரான பாஸ்கர் நடத்தி வந்த அரைக்கலன்கள் கடையில் கடந்த ஆண்டு 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று அண்ணாநகரில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு சென்ற மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரை தியாகராய நகரில் உள்ள திரை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு வைத்து நள்ளிரவில் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினரான பாஸ்கர் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!