காலையில் திருமணம்.. மாலையில் கொலை : தம்பதிகள் மாறிமாறி குத்திக் கொண்டதில் பலியான பரிதாபம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 6:15 pm

காலையில் திருமணம் செய்த காதல் தம்பதி மாலையில் இருவரும் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டம், செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20).

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது. இதனிடையே மதிய வேளையில் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர்.

அப்போது தம்பதிக்குள் பயங்கர தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. 2 பேரும் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.

இதை தொடர்ந்து, குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பே உயிரிழந்தார்.

எனினும் குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு ஜாலப்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு நகரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அதில், அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். அதன்பிறகு இருவரும் காயமடைந்து உயிரிழந்துள்ளனர்.

புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி காதலன் என‌ இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 206

    0

    0