திமுகவுக்கு ரூ.656 கோடியில் ரூ.509 கோடியை கொடுத்த மார்ட்டின்… வெளியான முழு பின்னணி!!!
தேர்தல் பத்திரம் செல்லாது. இனி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கக்கூடாது என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் 2019 முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரை தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை, நன்கொடை வழங்கியவர்களின் விபரங்களை வெளியிட எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் எஸ்பிஐ வழங்கும் தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 14ம் தேதி எஸ்பிஐ அளித்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரங்கள் தனித்தனியே இருந்தன.
தேர்தல் பத்திரத்தின் எண் இல்லாத நிலையில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கினர் என்பது தெரியாமல் போனது. எஸ்பிஐயின் இந்த செயலை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டித்ததோடு, தவறு நடந்தது தொடர்பாக நாளைக்குள் விளக்கம் அளிக்க எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே தான் 2018 முதல் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையில் உள்ளது. ஆனால் 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரையிலான தேர்தல் பத்திர நன்கொடை விபரங்கள் மட்டுமே கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு முன்பு 2018 முதல் 2019 ஏப்ரல் 12ம் தேதி வரையிலான தேர்தல் பத்திரங்களின் விபரம் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தான் வெளியிடப்படாமல் இருந்த 2019 ஏப்ரல் 12ம் தேதிக்கு முந்தைய தேர்தல் பத்திரங்களின் விபரம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
அதில் திமுகவுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி திமுக மொத்தம் ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.509 கோடியை ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் வழங்கி உள்ளது. இது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்குனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்த லாட்டரி மார்ட்டின் கடந்த பணமோசடி வழக்கில் சிக்கினார். மேலும் மார்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.