மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஆர். சுதாவை அக்கட்சியின் மேலிடம் அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இணைந்து 10 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, முதற்கட்டமாக 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. நெல்லை, மயிலாடுதுறை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.
இதனிடையே, திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் திருநெல்வேலி வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியது காங்கிரஸ்.
இதனையடுத்து, திருநெல்வேலி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார். அதேபோல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டார். ஆனால், மயிலாடுதுறை வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஆர். சுதாவை அக்கட்சியின் மேலிடம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு செய்வதில் உட்கட்சி மோதல் இருந்து வந்ததால், இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும், நீண்ட ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.