மேயர் பிரியா, அமைச்சர் கயல்விழி ஏன் பேசவில்லை.. ராஜினாமா செய்யுங்க.. கொந்தளிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்! .

Author: Udayachandran RadhaKrishnan
21 ஜூலை 2024, 10:35 காலை
pa
Quick Share

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி பிஎஸ்பி மற்றும் நீலம் அமைப்பினர் சார்பில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ், வில்லன் நடிகர் தீனா, தலித் கூட்டமைப்பினர், சமூக செயல்பாட்டாளர்கள், பல கட்சிகளின் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரமடா ஹோட்டல் அருகே தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டமும் நடந்தது.
இந்த கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். தொடர்ந்து மேடையில் பேசிய பா.ரஞ்சித்,”பிரியா ராஜன் திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை.. ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா ராஜன் மேயராகவும், கயல்விழி செல்வராஜ் அமைச்சராகவும் வாய்ப்பு கிடைத்தது.

மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை?

நீங்கள் திமுகவில் இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா? நாங்கள் அரசியலற்று இருக்கலாம்.

ஆனால் அரசியல்வுடைவர்களாக மாறும்பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும். மேயர் பிரியா ராஜன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் எப்படி உயர் பதவிகளுக்கு வந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எப்பொழுது இதற்காக குரல் கொடுப்பீர்கள்? குரல் கொடுக்கவில்லை என்றால் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள். நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை.

எங்களுக்கு பயம் ஏதும் கிடையாது. பயமில்லாமல் நாடாளுவோம். பயம் இல்லாமல் ஒன்றிணைவோம்.

எங்கள் பின்னாள் வேறு ஒருவர் இருக்கிறார் என்று பிம்பத்தை உருவாக்காதீர்கள். பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் திமுகவிற்கு எதிராக பேசவில்லை. அனைத்துக் கட்சிக்கு எதிராக பேசுகிறேன்.

அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள். அரசியல் கட்சிகள் எங்களுக்கு என்ன செய்தார்கள். எங்கள் தலைவர் இறந்த உடனே அவரை ஊருக்கு வெளியில் அடக்கம் செய்வது தான் திட்டமா?

ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னைக்குள் மணிமண்டபம் கட்ட வேண்டும். சமூக நீதியை பின்பற்றும் திமுகவிற்கு ஒரு வேண்டுகோள்.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னையில் மணிமண்டபம் கட்ட திமுக அரசு அனுமதிக்க வேண்டும். திமுக, அதிமுக அனைத்து கட்சிகளுமே எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அளிக்கவில்லை.

பாஜகவிற்கு நேர் எதிரானவர்கள் நாங்கள். உங்கள் பின்னாடி சும்மா அவர் இருக்கிறார், இவர் இருக்கிறார் என்ற பிம்பத்தை உருவாக்காதீர்கள்.
எங்களுக்கு பிரதிநிதித்துவம் இங்கு இல்லை. என்ன நீங்க சமூகநீதி மாடல்?

பல ஆணவக்கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விசிக தலைவர் திருமாவளனுக்கு எதிராக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். திருமாவளவனை ஒருபோதும் விட்டு விடமாட்டோம்; அவருடன் தான் இருப்போம் என்றார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 171

    0

    0