துரை வைகோ எல்லாம் ஒரு ஆளா..? வைகோவின் வாரிசுக்கு மதிமுகவில் கிளம்பிய எதிர்ப்பு… ஷாக் கொடுத்த துரைசாமி..!!
Author: Babu Lakshmanan29 April 2023, 1:24 pm
துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும், அவரை நான் மதிக்கவே இல்லை என மதிமுக அவை தலைவர் துரைசாமி பேச்சு
வாரிசு அரசியலை காரணம் காட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தத என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் திருப்பூரில் உள்ள மதிமுக அவை தலைவர் துரைசாமி இல்லத்தில் அவர் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது, துரைசாமி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- திமுகவிலிருந்து மதிமுக பிரிந்து வந்த போது, மதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள வைகோ, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவரது பேச்சை நம்பி 30 ஆண்டுகளுக்கு மேலாக மதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் தற்போது புறக்கணிக்கப்பட்டு வருகிறது. உட்கட்சி தேர்தலில் துரை வைகோவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.
மேலும், சிலரின் தூண்டுதலின் பெயரில் அவைத்தலைவர் துரைசாமி இது போன்று கருத்து தெரிவித்து வருவதாக துரை வைகோ கூறியது பற்றி பதிலளித்து பேசியதாவது :- துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோவிற்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அவரின் பதிலுக்காக காத்திருக்கிறேன். அவரின் கருத்துக்கு தான் பதில் சொல்வேன். இன்னும் ஒரு சில தினங்களில் வைகோவிடமிருந்து பதில் வரவில்லை எனில், ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பேன், என தெரிவித்தார்.