வாரிசால் அவமானம்… இதுக்கு பேசாம மதிமுகவை திமுகவுடன் இணைச்சுடுங்க.. வைகோவுக்கு மூத்த நிர்வாகி பரபர கடிதம்..
Author: Babu Lakshmanan29 April 2023, 10:10 am
மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் திமுகவுடன் வைகோவின் மதிமுக கட்சி கூட்டணி அமைத்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுடன் இணைந்தே போட்டியிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதிமுகவின் தலைமை பொறுப்பில் வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டார்.
வாரிசு அரசியலை எதிர்த்து விட்டு திமுகவில் இருந்து வெளியேறி கட்சி தொடங்கிய வைகோ, தற்போது அதே வாரிசு அரசியலில் தனது கட்சியையும் ஈடுபடுத்திக் கொண்டது பொதுமக்களிடையே மட்டுமின்றி கட்சியினரியும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இந்த நிலையில, மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று கூறி வைகோவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது என்றும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்து விட்டது என வைகோவை கடுமையாக சாடியிருந்தார்.