தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் விரக்தி… தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதிமுக எம்பி சிகிச்சை பலனின்றி பலி..!!!

Author: Babu Lakshmanan
28 March 2024, 8:29 am

தேர்தலில் சீட் கிடைக்காத நிலையில் தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேச மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட ஈரோடு தொகுதி இந்த முறை வழங்கப்படவில்லை. திருச்சி தொகுதியிலும் வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த சூழலில், ஈரோடு தொகுதியில் கடந்த முறை மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்பி கணேச மூர்த்தி மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் தற்கொலை முடிவெடுத்து மாத்திரைகளை அதிகளவு சாப்பிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

கடந்த 3 தினங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிகிச்சையின் போது ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 259

    0

    0