மதிமுக கூடாரம் மொத்தமும் காலி… வைகோ முடிவால் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 10:10 am

மதிமுக கட்சியில் இருந்து, அதன் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்க்கோனியை நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.

இந்நிலையில் பொதுச்செயலாளர் வைகோவின் முடிவை கண்டித்து, மதிமுக பொறுப்பாளர்கள் 28 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்கோனி, மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ஆக இருப்பவர், இவர் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் உட்பட பல்வேறு உயரிய பொறுப்புகளில் இருந்து, கட்சிக்காக கடுமையாக உழைத்து, படிப்படியாக முன்னேறி தற்போது மாவட்ட செயலாளராக உள்ளார்.

இந்த சூழலில் தான் மார்க்கோனி, அதிமுக கவுன்சிலர்களின் உதவியுடன் தன் தாயை நகராட்சி தலைவராக திட்டமிட்டு இருப்பதாகவும். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்து அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வைகோ அவரை கட்சியிலிருந்து நீக்கினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மார்கோனி நீக்கப்பட்டதை கண்டித்து மதிமுக கட்சியின் பொருளாளர்கள் 28 பேர் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!