மோடிக்கு புத்தி கெட்டு போச்சா..? பாஜகவை வேரடி மண்ணோடு அழிக்கனும்… வைகோ ஆவேசம்…!!!
Author: Babu Lakshmanan11 April 2024, 11:32 am
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தலை எடுக்க முடியாத அளவுக்கு வேரோடும், வேரடி மண்ணோடும் இந்துத்துவா சக்திகளை வீழ்த்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக 8 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் கதறியபோது ஏன் வரவில்லை என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்த பலபேர் காணாமல் போய்விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அது நடந்தது உண்மை தான்… ED விசாரணை குறித்து இயக்குநர் அமீர் சொன்ன தகவல்..!!!
இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு ஓபுளா படித்துறை பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது :- தேர்தல் பிரச்சாரத்திற்காக எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார் பிரதமர் மோடி. புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கண்ணீரும், கம்பலையுமாக பல லட்சம் தாய்மார்கள் கதறினார்களே, அப்போது வந்தீர்களா?
திராவிட இயக்கத்தை அழித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன் என்கிறார் மோடி. இப்படி புறப்பட்ட பலபேர் காணாமல் போய்விட்டார்கள். பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கட்டிக்காத்து எழுப்பிய திராவிட இயக்கத்தை அழிப்பேன் என சொல்கிறீர்களே, உங்களுக்கு புத்தி கெட்டு விட்டதா? அல்லது நாட்டின் நிலைமை தெரியாமல் போய்விட்டதா? திராவிட இயக்கத்தின் ரத்தம் தான் என்னுடைய உடலிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: இன்றும் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
லட்சக்கணக்கான தொண்டர்கள் பாடுபட்டு வளர்த்த இயக்கம் இது. இதை அழிக்க முடியாது. இந்த நாட்டை சனாதன சாம்ராஜ்யமாக மாற்ற நினைக்கிறார்கள். இந்தியா என்ற இந்த நாடு இயற்கையினால் உருவானதே தவிர, பாரம்பரியமாக உருவான ஒரு நாடு அல்ல. நாட்டில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்கிறார்கள். இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று அரசமைப்பை தூக்கி எறிந்து விட நினைக்கிறார்கள்.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள பாராளுமன்ற ஜனநாயக கவர்மெண்ட் முறையை மாற்றிவிட்டு, குடியரசு தலைவர் ஜனநாயக முறையை கொண்டு வந்துவிட்டால் நாம் ஜனாதிபதியாக விடலாம், என்றும் ஐந்து வருட ஆட்சி காலத்தை ஏழு வருடங்களாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் மோடி இருக்கிறார். நரேந்திர மோடி தான் இந்தியாவின் முதல் எதிரி.
இந்த நாட்டினுடைய ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டும். அத்தனை மாநில முதல்வர்களும் நமது முதல்வரை தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவரிடம் யோசனை கேட்கிறார்கள். இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தலை எடுக்க முடியாத அளவுக்கு வேரோடும், வேரடி மண்ணோடும் இந்துத்துவா சக்திகளை வீழ்த்த வேண்டும்” என பேசினார்.