மெகா கூட்டணி அமையப்போகுது… பெரிய கட்சிகள் இணைய ஆர்வம் : சஸ்பென்சை உடைக்க ஜெயக்குமார் மறுப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2024, 3:21 pm

மெகா கூட்டணி அமையப்போகுது… பெரிய கட்சிகள் இணைய ஆர்வம் : சஸ்பென்சை உடைக்க ஜெயக்குமார் மறுப்பு!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு பாஜக இல்லாத மற்ற கட்சிகளை வரவேற்கிறோம்.

எங்களுடன் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக் கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் தற்போது வெளியில் சொல்ல முடியாது. தேர்தல் நெருக்கத்தில் அறிவிப்போம் எனத் தெரிவித்தார் ஜெயக்குமார்.

மேலும், சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். தேர்தல் அறிக்கை தொடர்பாக மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம்.

நாளை வேலூர் மண்டலம், 6ஆம் தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம். 10 பேர் கொண்ட குழு நேரடியாக மக்களைச் சந்தித்து கருத்துக்களைப் பெறுகிறது. மக்கள் தங்கள் பரிந்துரைகளை இ-மெயில் மூலமாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!