‘மெகா வெற்றி’ பெற்ற எடப்பாடியார்… காய் நகர்த்தும் அன்புமணி : உடனே போட்ட ட்வீட்!!
Author: Udayachandran RadhaKrishnan28 March 2023, 5:14 pm
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மட்டுமே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில் நடைபெற்ற பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டற்கான சான்றிதழை கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி வாங்கினார்.
அதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடிவருகின்றனர்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.