மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மாதம் அம்மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டி ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழகத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அண்மையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, அணை கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இது தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடைய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனிடையே, கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக, தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு, மிகத் தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள திமுக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.
நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கிறதோடு, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
This website uses cookies.