மீண்டும் நீட் வினாத்தாள் கசிவா? 70,000 க்கு விற்பனை என்ற தகவலால் பரபரப்பு:தீயாய் பரவும் மெஸேஜ்கள்…!!
Author: Sudha7 August 2024, 5:22 pm
ஆகஸ்ட் 11 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நீட் முதுநிலை தேர்வுகளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் NEET PG வினாத்தாள்கள் பல்வேறு சமூக வலை தளங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது டெலிகிராம் குழுக்களால் விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
எக்ஸ் வலைதளத்தில் பயனர்களால் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்கள் “NEET PG leaked materials” என்று பெயரிடப்பட்ட பல டெலிகிராம் குழுக்கள் மற்றும் சேனல்களின் கசிந்துள்ள தகவல்களை வெளிப்படுத்துகின்றன.இந்தக் குழுக்கள் இரண்டு ஷிப்டுகளுக்கும் கசிந்த தேர்வுத் தாள்களை அதிக விலையில் வழங்குவதாகவும், 70,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.