வெளுத்து வாங்கப் போகும் மழை… மக்களே உஷார் : வானிலை மையம் வார்னிங்!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2024, 12:58 pm

தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வரும் 11, 14, 15 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே போல, 12, 13, 16 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: வீடு புகுந்து தாக்குதல்… பெண் வழக்கறிஞரை மிரட்டும் மனோ தங்கராஜின் தம்பி!

இதனிடையே பேரிடரை கையாள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 222

    0

    0