மேம்பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் 3 சடலங்கள்… மேட்டூரை உலுக்கிய சம்பவம் ; போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 1:32 pm

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே மேம்பாலம் அடியில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், கொலையா? என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் – சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது பணிக்கனூர். இங்கு ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தென்னன் தோப்பு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. மேம்பாலத்தின் அடியில் கடும் துர்நாற்றம் வீசவே இன்று தோட்ட உரிமையாளர் ராஜரத்தினம் சென்று எட்டி பார்த்துள்ளார் ஒரு சடலம் இருந்ததால் ஜலகண்டபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: நல்லாட்சி வழங்குவது போல பொய் பிம்பம்… மாய உலகத்தில் திளைக்கும் CM ஸ்டாலின் : இபிஎஸ் விமர்சனம்!!

போலீசார் நேரில் வந்து பார்த்தபொழுது சுமார் 50 முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணின் சடலமும் அருகில் ஒரு மொபட்டும் இருந்தது.

சடலங்களுக்கு அருகே மது பாட்டிலும், தண்ணீர் இருந்த நிலையில் அருகே ரத்தம் உறைந்து காணப்பட்டது. மூவரும் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை. சடலத்தை கைப்பற்றிய ஜலகண்டபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது மர்மமாக உள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!