மனித உருவில் தெய்வங்கள்: வயநாடு பேரழிவு; மீட்புப் பணிகளில் ராணுவம்; செய்து விட்ட அற்புதம்….!!

Author: Sudha
2 August 2024, 8:48 am

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்கள் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர் தன்னார்வலர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமன்றி மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

இந்த நிலச்சரிவு பேரழிவால் முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதிகளை இணைக்கும் பாலம் முற்றிலும் சேதமடைந்தது.ஒவ்வொரு நாளும் மண்ணில் புதைந்த உடல்களை மிகுந்த சவாலோடு மீட்புக் குழுவினர் மீட்டு வந்தனர். இருவிழிஞ்சி ஆற்றைக் கடக்க பாலம் இல்லாமல் ஆபத்தான முறையில் நிலச்சரிவு பகுதிகளை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பணிகளை விரைந்து முடிக்க இந்திய ராணுவத்தினர் 200 பேர் தற்காலிகப் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். ராட்சத இரும்புகளைக் கொண்டு 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பாலப் பணிகளை தொடங்கினர்.

கொட்டும் மழையிலும் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்படவில்லை. 31 மணி நேரம் இடைவிடாது பணி செய்து 190 அடி நீளத்திற்கு தற்காலிக பாலத்தை வெற்றிகரமாக ராணுவத்தினர் கட்டி முடித்தனர். உடனே ராணுவ வாகனம் சோதனை செய்யப்பட்டது.இந்த பாலத்தில் கனரக வாகனங்களும் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!