அடுத்தடுத்து வாகனங்கள் மீது டெம்போ மோதி விபத்து… ஓம் சக்தி பக்தர்கள் 5 பேர் பலி ; அதிகாலையில் நிகழ்ந்த பயங்கரம்..!!!
Author: Babu Lakshmanan30 December 2023, 9:33 am
புதுக்கோட்டை அருகே ஓம் சக்தி பக்தர்கள் மீது சிமெண்ட் ஏற்றி வந்த ஈச்சர் வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னையை சேர்ந்த ஓம் சக்தி பக்தர்கள் மாலை அணிவித்து ஒவ்வொரு ஆலயமாக சென்று வந்துள்ளனர். தற்பொழுது ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர். அப்பொழுது, புதுக்கோட்டை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை தங்களது வந்த வாகனங்களை இரண்டு கார் ஒரு சைலோவில் தேநீர் அருந்த ஓரமாக நிறுத்தி உள்ளனர்.
அப்பொழுது அதிவேகமாக வந்த சிமெண்ட் மூட்டை ஏற்றிய ஈச்சர் வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் மீது மோதியது. இதனால் அதே இடத்தில் 4 பேர் இறந்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமண சமுத்திரம் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, காயமடைந்தவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 108 வாகனத்தில் கொண்டு செல்லும் பொழுது, மேலும் ஒருவர் பலியானார்.
பின்னர் காயமடைந்த அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாலை நடந்த சாலை விபத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.