பின்புலத்த பாக்கல… அவரோட வேலையத்தான் பார்த்தோம் ; கல்வி தொலைக்காட்சி CEO விவகாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

Author: Babu Lakshmanan
17 August 2022, 2:36 pm

அரசு தொலைக்காட்சி அரசாங்கமும், அன்பில் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் ஏமாந்து விட மாட்டோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கல்வித்துறையின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உட்பட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பல கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது :- இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையானது உட்கட்டமைப்பு வசதிகள். ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைப்படும் கட்டிடங்கள், இடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவைகளை கேட்டுள்ளனர்.

இதற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது அரசு பள்ளிகளை அதிகப்படியாக மாணவர்கள் சேர்க்கை உள்ளதால், அதிகப்படியான ஆசிரியர்கள் தேவையில்லை. பள்ளி மேம்பாடு திட்டத்தின் கீழ் 1300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிதி வந்தவுடன் நிதி வழங்கப்படும். குறிப்பாக, மரத்தடியில் செயல்படும் பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

இந்த திருச்சி மாவட்டத்தில் ‘படிக்கலாம் வாருங்கள்.. வெளிநாடு பறக்கலாம் வாருங்கள்…’ என்று பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, பள்ளியில் பயிலும் மாணவர்கள், அந்த பள்ளியில் உள்ள நூலகத்தில் புத்தகம் எடுத்து வாரத்திற்கு ஒரு முறை எடுத்து படித்து, அதன்மூலம் அவர் எழுதுகிற விமர்சனமாக இருந்தாலும், கட்டுரையாக இருந்தாலும், ஓவியமாக இருந்தாலும் சரி, அதில் சிறந்த மாணவர்களை சுமார் 114 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் மாநில அளவில் எழுத்தாளர்கள் படைப்பாளருடன் உரையாட வைக்க வேண்டும்.

பின்னர், அதிலிருந்து 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை வெளிநாடு கூட்டிச் செல்லும் திட்டத்திற்கு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாணவர்களை எதெல்லாம் ஊக்கப்படுத்த முடியுமோ, அது கலை பண்பாடு இருந்தாலும், விளையாட்டு துறையாக இருந்தாலும், இது போன்ற வாசிப்பு திறனாக இருந்தாலும், மாணவர்களை பிரித்து எடுத்து ஒவ்வொரு பிரிவிலும் 25 பேராக தேர்வு செய்து மற்றும் 200 பேர்களை வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும். மேலும் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் தேசிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம். மரத்தடியின் கீழ் நடைபெறும் சுமார் 2500 பள்ளியை கண்டறிந்துள்ளோம். வருகின்ற பணத்தில் முதலில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளோம்.

இரவு சமூக வலைதலைங்களில் ஒரு ஹாஸ்டேக்கை கண்டேன். அதில் என்னடா, அன்பில் பேரனுக்கு வந்த கொடுமை என்று நினைத்துக் கொண்டேன். இதில் விவாதம் செய்த நண்பர்கள், ஆதரவு தெரிவித்த நண்பர்கள், கோரிக்கையாக அறிவுரை சொன்ன நண்பர்கள், என அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

பள்ளிக்கல்வித்துறைக்கு TV கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதை மேம்படுத்த வேண்டும் என்று கூட்டத்தொடரில் பேசினோம். ஒரு தொலைக்காட்சி பத்தாது இரண்டாவது தேவை என்று சொல்லி, அதில் நிர்வாகிப்பதற்காக ஒரு அழைப்பாணை விடுவித்தோம். 79 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். இதில் தகுதியின் அடிப்படையில் அதில் 11 பேரை தேர்ந்தெடுத்து அதில் மூன்று பேரை தேர்வு செய்தனர். நாங்கள் அதை தேர்வு செய்யவில்லை.

அதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டு அது கல்வித்துறை இயக்குனர் என ஐந்து பேர் சேர்ந்து தேர்வில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பலர் என்னிடம், இவரு அவருக்கு நண்பர்… இவருக்கு நண்பர் என கூறினர். நண்பர் என மட்டும் பாராமல், அவர் எப்படி வேலை செய்கிறார் என்று பார்க்கலாம் என்பது போல் தான் இரண்டு நாட்களாக வைரலாக இந்த செய்தி வருகிறது. இது குறித்து அவருடைய பின்புலம் என்ன என்பது தெரிய வந்த பிறகு, நியமனம் குறித்த உத்தரவை நிறுத்தி வைக்க கூறி இருக்கிறேன்.

மேலும், பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறேன். அரசாங்கமும், அன்பில் பொய்யாமொழி இந்த விஷயத்தில் ஏமாந்து விட மாட்டோம் என்பது சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அன்பில் மகேஷ் வளர்ந்திருக்கிறார் என்றால், அது உங்களால் தான். எதையும் நான் பாசிட்டிவ்வாவே எடுத்துக் கொள்கிறேன். நான் எந்த அளவு கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ, அந்த அளவு நான் கவனமாக இருப்பேன், என தெரிவித்தார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 655

    0

    0