அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம் : பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி

Author: Babu Lakshmanan
2 February 2022, 7:18 pm

சென்னை : பணமோசடி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்க்ததுறை முடக்கியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினின் அமைச்சரவையில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இவர் மீது 2002ம் ஆண்டு பணமோசடி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 160 ஏக்கர் நிலம் உள்பட ரூ.6.5 கோடி மதிப்பிலான 18 சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர் ஒருவரின் சொத்துக்கள் பணமோசடி வழக்கில் முடக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1473

    0

    0