2014ல் நாடாளுமன்ற தேர்தலா…? மேடையில் உளறிய அமைச்சர் அன்பரசன்.. கூட்டத்தில் பொறுமையை இழந்த மக்கள் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 8:47 am

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் என உளறிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய குழு தலைவர் எஸ்டி.கருணாநிதி தலைமையில் முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் மற்றும் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தமிழக முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் கொண்டாடத்தை குறித்தும் தமிழக அரசின் சாதனைகள் குறித்தும் மக்களிடத்தில் உரையாடினார். அப்போது, மேடையில் பேசிய அவர், வருகின்ற 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உளறினார்.

பின்னர், நலத்திட்ட உதவிகள் வழங்க தொடங்கினார். அப்போது, முதலே கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு மேடை அருகே குவிந்தனர். அமைச்சர் தாமோ அன்பரசனோ ஒரு சிலருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு மேடையில் இருந்து உடனே கீழே இறங்கி அடுத்த நிகழ்வுக்காக புறப்பட்டு சென்றார்.

ஏற்கனவே, அமைச்சர் வருவதற்கே 3 மணி நேரம் தாமதமானதால், அங்கு இருந்த பொதுமக்கள் பொறுமை இழந்து அனைவரும் முந்தி அடித்துக் கொண்டு கீழே விழுந்தும், கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தும், தென்னங்கன்று, சில்வர் பாத்திரங்கள், அரிசி மூட்டைகள் என அனைத்தையும் எடுத்துச் சென்றனர். இதனிடையே, கட்டுங்கடங்காத கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் திணறினர்.

இதில் மூதாட்டிகளை வாலிபர் ஒருவர் அடித்து கீழே தள்ளியதும் , மற்றொரு வாலிபர் இளம் பெண் ஒருவரை கீழே தள்ளி விடுவது போல் ஆங்காங்கே தொடுவதும், ஆபத்தை உணராமல் இலவச பொருளுக்காக ஆண்கள், பெண்கள் பேதமின்றி அள்ளிச் சென்றதும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்த பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட விழா ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என திமுகவினரே முணுமுணுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 427

    0

    0