அமைச்சர் எவ வேலு வீட்டில் ஐடி ரெய்டு.. பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை..!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 8:35 am

அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதன நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், திருவண்ணாமலையில் உள்ள வீடு, கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா..? என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 373

    0

    0