சினிமா பாணியில் நடக்கும் ஐடி ரெய்டு… அமைச்சர் எவ வேலுவுக்கு போட்ட ஸ்கெட்ச்… வெளிமாநிலங்களில் இருந்து வந்த அதிகாரிகள்..!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 11:11 am

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், திருவண்ணாமலையில் உள்ள வீடு, கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா..? என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, கோவையில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அங்கு காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் எனப்படும் நிலையில், இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் சேர்மன் இல்லமான சக்திவேல் இல்லத்திலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. மூன்று வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் நான்கு குழுக்களாக பிரிந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் சினிமா படத்தை மிஞ்சும் அளவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராயர் சாலை ரெசிடென்சி டவர்ஸ், ஜிஎன் செட்டி சாலை ரெசிடென்சி இன் ஆகிய 2 நட்சத்திர விடுதியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளே சுற்றுலா பயணிகள் போல் அறையெடுத்து தங்கி, நோட்டம் விட்டு, இன்று காலையில் அதிரடி சோதனையில் இறங்கினர்.

திநகர் ரெசிடென்சி ஹோட்டலில் அமைச்சர் எவ வேலுவுக்கு நெருக்கமானவர்கள் தங்கியுள்ள அறைகளை குறிவைத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. CASA GRANDE அடுக்குமாடி குடியிருப்பு, ஹவுசிங்சொஸைட்டி கட்டுமான நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?