சத்துணவு முட்டைகள் கெட்டுப்போகல… உண்மையில் இதுதான் நடந்துச்சு ; பாஜகவினர் இதை பெரிதுபடுத்துறாங்க ; அமைச்சர் கீதாஜிவன் கொடுத்த விளக்கம்!
Author: Babu Lakshmanan15 November 2023, 10:35 am
சத்துணவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் குறித்து எப்பொழுது குற்றச்சாட்டு கண்டுபிடிக்கலாம் என செயல்பட்டு, அதை பூதாகரமாக பாஜக ஆக்கி வருவதாக அமைச்சர் கீதாஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ராஜாஜி பூங்கா முன்பு WALK FOR CHILDREN பேரணி அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு WALK FOR CHILDREN பேரணி சமூகப் பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு WALK FOR CHILDREN பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில், காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு அலுவலர்கள் உட்பட பலர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக தூத்துக்குடி புதிய மாநகராட்சி வரை நடந்து சென்றனர். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அலெக்ஸ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரூபன் கிஷோர், வழக்கறிஞர் சொர்ணலதா உட்பட துறை சார்ந்த பலர் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்றைய தினம் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகள் உரிமை பாதுகாத்திட மாவட்ட குழந்தைகள் அழகு சார்பில் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதாக தெரிவித்தார்.
தமிழக முதல்வர் பொறுப்பேற்ற நாள் முதல் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்கள். குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களை குறைக்க வேண்டும், குழந்தைகளின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும், எல்லா குழந்தைகளும் படிக்க வேண்டும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதற்கேற்றார் போல் சமூக பாதுகாப்புத்துறை காவல்துறையினருடன் இணைந்து குழந்தைகளின் போக்சோ வழக்குகளாக இருந்தால் விரைந்து முடித்திடவும் அவர்களுக்கு நீதி கிடைத்திடவும் சமூக நலத்துறை செயல்பட்டு வருகிறது என்றார்.
சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் தொடர்ந்து சர்ச்சைகளாக்கப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது குறித்து பாஜக கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விநியோகிப்பாளரிடம் பேசி 96 முட்டைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் பேசி மாற்றி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விநியோகிப்பாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. பின்பு அந்த முட்டைகள் உணவு பாதுகாப்பு துறை மூலம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
தமிழக அரசு திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் விநியோகிக்கப்படும் முட்டைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் வைக்க வேண்டும் என 2006ம் ஆண்டு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சர்ச்சைக்குரிய நாளில் கருப்பு கலர் முட்டை மீது வைக்கப்பட்டு தமிழக அரசு முத்திரை அதில் இடப்பட்டிருந்தது. அன்றைய தினம் கடும் மழை தார்ப்பாய் இல்லாமல் வாகனம் வந்துள்ளது. முட்டைகள் எல்லாம் நனைந்து கருப்பு மை ஊறி அந்த கருப்பு கலர் அனைத்து முட்டைகளிலும் இறங்கியுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. சிலர் எப்பொழுது குற்றச்சாட்டு கண்டுபிடிக்கலாம் என செயல்பட்டு இதை பூதாகரமாக ஆக்கியுள்ளனர். உண்மை நிலவரம் அப்படி அல்ல, முறையாக செயல்பட்டு வருகிறது. நல்லா அவித்த முட்டை தரமாக வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.
குழந்தைகள் திருமணம் அதிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது, ஒரு சில இடங்களில் தாய் தகப்பன் பண்ணி வைக்கக்கூடிய நிலை உள்ளது. அதுவும் 1018க்கு போன் வந்தவுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது. தாமாகவே முன்வந்து காதல் திருமணம் நடைபெற்று வந்த பிறகு, குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரியப்படுவதில்லை, சட்டப்படி 18 வயது முடியாத குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறுவதால் தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் அதிகளவில் நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் இது குறித்து புகார் வரும் பொழுது வழக்குகளும் பதிவும் செய்யப்படுகிறது என்றார். அதனால் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும், குழந்தைகள் திருமணம் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது என்றார். இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இளம் பெண்கள் மிகவும் கவனமாக பழக வேண்டும், பழகுற எல்லாரையும் நம்பிவிடக்கூடாது, குடும்பத்தார் ஆதரவோடு நல்லவர்கள் யாரு கெட்டவர்கள் யார் என்று மனப்பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும், யாரையும் எடுத்தவுடன் நம்பக்.கூடாது, என்றார்.