நிலுவையில் இருக்கும் ஜிஎஸ்டி வரிப் பணத்தையே வாங்க முடியல… இதுல கூடுதல் வரிய விதிக்கிறோமா..? அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு..!!

Author: Babu Lakshmanan
3 August 2022, 6:11 pm
Quick Share

திண்டுக்கல் : மக்கள் அன்றாடும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதா..? எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஐ.பெரியசாமி, அந்த அம்மாவை (நிர்மலா சீதாராமன்) முதலில் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய சொல்லுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பிரிவு அருகே புதிதாக ஆத்தூர் ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் கூட்டுறவுத்துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது :- அமலாக்கத்துறை யார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதேபோல் அதிகாரம் வைத்துள்ளவர்கள் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், நீதிமன்றம் மூலம் சரியான தீர்வு கிடைக்கும். கூட்டுறவுத் துறை அமைச்சர் அமலாக்கத் துறைக்கு சென்று கால் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தற்போது அரசியல் லாபத்திற்காக மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது, எனக் கூறினார்.

இதனிடையே, ஜிஎஸ்டி வரி உயர்வால் ஒரு கிலோ தயிருக்கு ரூ.105 வசூலிக்க வேண்டிய தமிழக அரசு, ரூ.120 வசூலிப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது பற்றி அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது :- தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தின் காய்கறி விளைச்சல் அதிகப்படியாக உள்ள நிலையில், காய்கறிகள் அனைத்தும் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும், ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி என்பது வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் சேரும். ஆனால், நூறு ரூபாய் பொருளுக்கு ஜிஎஸ்டி ஐந்து சதவீதம் என்றால் 15 ரூபாய் என்பது மட்டுமே வசூல் செய்ய முடியும். ஆனால், தற்போது வரை ஜிஎஸ்டி வரியை வசூல் செய்த ஒன்றிய அரசு, 24 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டியுள்ளது.

மேலும், வர்த்தகர்கள் தான் விலையை நிர்ணயம் செய்ய முடியும். அதில், தமிழக அரசு அதிகப்படியாக ஜிஎஸ்டி ஆக இருந்தாலும், இருக்கக்கூடிய ஜிஎஸ்டி வரியையே வாங்க முடியாமல் இருக்கும் பொழுது, கூடுதலாக எப்படி வரி வாங்க முடியும். இருந்தாலும்கூட வியாபாரிகள் ஜிஎஸ்டி வரியை எப்படி பொதுமக்களிடம் வாங்குகிறார்கள் என்பது தெரியாது. விலையை உயர்த்தி வாங்குகிறார்களா என்பது தெரியாது. ஆனால், மத்திய அரசு எதற்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வருகை உயர்த்துள்ளனர். முதலில் அந்த அம்மாவை ஜிஎஸ்டி வரியை நீக்க சொல்லுங்கள், எனக் கூறினார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 721

    0

    0