ஆய்வுக்கு சென்ற போது நூலிழையில் தப்பிய அமைச்சர்… தவறி விழுந்த அதிகாரி ; கட்டுமானங்களின் தரம் குறித்து விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
6 October 2023, 11:55 am

திருமலைநாயக்கர் மஹாலில் புனரமைப்பு பணி ஆய்வின் போது, கட்டுமானம் உடைந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரி தவறி விழுந்த நிலையில், அமைச்சர் எவ வேலு நூலிழையில் தப்பினார்.

மதுரை மாநகர் திருமலை நாயக்கர் மஹாலில் 12 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு ஆய்வு மேற்கொண்டார். அந்த சமயம், அவருடன் வந்த பொதுப்பணித்துறை அதிகாரி கட்டுமானத்தின் மேல் நின்றிருந்தார். அப்போது திடீரென மழைநீர் செல்லும் வடிகால் கட்டுமானம் உடைந்து பள்ளத்தில் விழுந்தார்.

இந்த நிலையில், அவர் அருகில் இருந்த அமைச்சர் ஏவ வேலு நூலிழையில் தப்பினார். ஆய்வின்போது கட்டுமானம் திடீரென விழுந்து பொதுப்பணித்துறை அதிகாரி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

https://player.vimeo.com/video/871723808?badge=0&autopause=0&quality_selector=1&progress_bar=1&player_id=0&app_id=58479

கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வுக்கு சென்ற போது, கான்கிரீட் கட்டுமான இடிந்து விழுந்து சம்பவத்தால், கட்டுமானங்களின் தரம் குறித்தும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், மாவீரன் படம் போல எத்தனை பேட்ச் ஒர்க் பார்க்க வேண்டியிருக்குமோ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!