முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கும் திமுக…கட்சி வேறு… ஆட்சி வேறா… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 2:42 pm

முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறப்படும் தி.மு.க. தொண்டரை தாக்கியது, நிலமோசடி வழக்கு உள்ளிட்ட 3 வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அவர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரம் மூன்று நாட்கள் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த கடந்த வாரம் திங்கள் முதல் கையெழுத்திட்டு வரும் ஜெயக்குமார், இன்று 5வது நாளாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் கூறியதாவது :- தேர்தல் அறிக்கையில் இல்லாத வாக்குறுதிகளை கூட நாங்கள் நிறைவேற்றினோம். திமுக அரசிடம் மக்கள் மாதம் 1000 ரூபாய் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை திமுக அரசு ஏன் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை பொருத்தவரை நிதி தன்னாட்சி பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் அதை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை என்று டி.ஆர் பாலு கூறுகிறார். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று, கேட்டால் கட்சி ரீதியாக சொன்னோம் என்கிறார்.

கட்சி ரீதியாக ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். ஆட்சி ரீதியாக ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது. கட்சி வேறு,ஆட்சி வேறு என்கிற அளவில் செயல்பட்டு வருகிறார்கள், எனக் கூறினார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சின்னம்மா மீது மதிப்பும், மரியாதையும் உள்ளது என்று கூறியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ முழுமையாக விசாரணையை நடத்தி முடித்து வருகிறது. இது குறித்து நான் கருத்து கூறினால் என்னையும் ஆணையம் அழைத்து சம்மன் செய்து விசாரணை செய்வார்கள். இந்த நேரத்தில் நான் இது குறித்து எதுவும் கூற முன் வரவில்லை.

திமுக ஆட்சியில் பத்திரிகையாளர்களை விட்டால் அந்தமானுக்கு தள்ளி பேட்டி எடுக்க சொல்வார்கள் போல. சசிகலா அவர்களை அதிமுகவில் இணைப்பது குறித்து உங்களுடைய கருத்து..? ஏற்கனவே கட்சி எடுத்த ஒரே முடிவுதான். நேற்று, இன்று, நாளை கட்சி எடுத்த முடிவு தான், எனக் கூறினார்

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1673

    0

    0