அண்ணாமலை விதித்த கெடு… மனு அளிக்க வந்தவரை தாக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். : பேப்பரால் தாக்கப்பட்ட பெண் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 1:50 pm

விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி மனு அளிக்க வந்த ஏழைப் பெண்ணை அமைச்சர் கேகேஎஸ்எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தாக்கியது போன்ற காட்சிகள் இணையத்தில வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர், பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். இது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும், தமிழக அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவது போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மனு கொடுக்க வந்த ஏழைப் பெண்மணியை பேப்பரால் அமைச்சர் அடிக்கும் வீடியோ இணையத்தில் தொடர்ந்து பரவும் நிலையில், அமைச்சர் தன் உறவினர் எனவும், தன்னை விளையாட்டாக செல்லமாக அடித்தார் என வீடியோவில் இருந்த பெண் கூறியுள்ளார்.

அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கியதாக கூறப்பட்ட கலாவதி என்ற பெண் விருதுநகரில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமைச்சர் ராமச்சந்திரனை கடந்த 30 ஆண்டாக தங்களுக்கு தெரியும் எனவும், அமைச்சர் தன்னை விளையாட்டாகவும் செல்லமாகவும் பேப்பரால் தட்டியதாகவும், அன்று அளித்த மனுவிற்கு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டதாகவும் கலாவதி கூறியுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்