‘நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர்.. நாவை அடக்கி பேசுங்க’.. ஜெயலலிதா குறித்து மோசமான விமர்சனத்திற்கு ஜெயக்குமார் பதிலடி!!

Author: Babu Lakshmanan
6 January 2023, 11:20 am

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மோசமாக விமர்சித்த அமைச்ச் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கி பேசினார்.

எம்ஜிஆர், கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்ற தான், இப்போது ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறிய அவர், ஜெயலலிதாவை ராட்சசி என்றும், தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு எனக் கூறினார்.

அந்த பாவத்தின் பலனை 10 ஆண்டுக்காலம் அனுபவித்ததாக கூறிய அவரது பேச்சுக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கேகேஎஸ்எஸ்ஆர் இப்படி பேசலாமா..? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,விசுவாசிகளுக்கு மட்டுமல்ல உங்களை போன்ற துரோகிகளுக்கும் வாழ்வு தந்தவர் அம்மா அவர்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர் …நாவடக்கம் தேவை.. தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வளர்ந்து இருப்பதற்கு காரணம் அம்மா அவர்கள் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்கள் தான், நீங்கள் இன்று அமைச்சராக இருப்பதற்கு உங்களை அடையாளம் காட்டியது அஇஅதிமுக தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நன்றி மறந்த உங்களுக்காக ஆரம்ப காலங்களில் பல தேர்தல்களில் உழைத்து அதிமுக- தான் தவறிழைத்துவிட்டது.

விசுவாசிகளுக்கு மட்டுமல்ல உங்களை போன்ற துரோகிகளுக்கும் வாழ்வு தந்தவர் அம்மா அவர்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். “யாகாவாராயினும் நாகாக்க” என ஜெயக்குமார் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 587

    0

    0