திருச்சியில் புதிதாக திறக்கப்பட உள்ள விமான நிலைய 2வது முனைய திறப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. மேலும், கூடுதல் செலவினமாக ரூ. 249 கோடி என மொத்தம் ரூ.1200 கோடி மதிப்பிட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில், புதிய முனையம் திறப்பு விழா ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
புதிய முனையை திறப்பு விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக நேற்று திருச்சி விமான நிலையத்தில் சிகிச்சை அளித்த பேட்டியில் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், புதிய முனையத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- ஜனவரி 2ம் தேதி புதிய முனையம் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. திறப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற உள்ளார். எனவே, அவரது வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இன்னும் விமான நிலையம் செயல்பட சில மாதம் மேலாகும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் 70 ஏக்கர் கையகப்படுத்தும் பணி முடிவு பெறும். பிரதமர் வந்தால் நாங்கள் அழைத்துச் செல்வோம், தெரிவித்தார்.
இதனிடையே, விமானக் கட்டுமானப் பணிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா..? என்று நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர் கேஎன் நேரு, ‘ஏங்க அது எல்லாம் தேவையாங்க’ எனக் கூறி நழுவினார்.
இந்த நிகழ்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.