அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை… கோவையில் விடிய விடிய ரெய்டு..!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 9:45 am
Quick Share

அமைச்சர் கேஎன் நேருவுக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: பிரச்சாரத்தின் போது அதிமுக – பாஜக மோதல்… அண்ணாமலை வாகனத்தை சிறைபிடித்த அதிமுக வேட்பாளர்.. கோவையில் பரபரப்பு..!!

இந்த நிலையில், கோவை லட்சுமி மில்ஸ் அருகே உள்ள அவிநாசி ரவி என்பவரின் அலுவலகம், ராம் நகர் பி.எஸ்.கே அலுவலகம் மற்றும் அவிநாசியில் உள்ள குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரின் அலுவலகம் என 3 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடைபெறும் 3 பேரும் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர்கள் என சொல்லப்படுகிறது. தமிழக அரசின் ஒப்பந்த பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நேற்று தொடங்கிய இந்த சோதனை 2வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

மேலும் படிக்க: நள்ளிரவில் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் திடீர் கைது… போலீஸ் வாகனத்தை மறித்து பாஜகவினர் தர்ணா..!!

அதேபோல, சென்னை இந்திரா நகரில் ராமச்சந்திரா கட்டுமான நிறுவனத்திலும், திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் 2வது நாளாக ரெய்டு நடந்து வருகிறது. அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 283

    0

    0