கோயம்பேடு பேருந்துநிலையத்தை மூட இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்..? திமுக அரசுக்கு பாஜக கேள்வி
Author: Babu Lakshmanan11 பிப்ரவரி 2024, 4:24 மணி
எதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட வேண்டும் என்பதை மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மத்திய அமைச்சர் எல் முருகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக அரசு எந்த அளவுக்கு தோல்வி உற்ற அரசு என்பதை கிளம்பாக்கம் பேருந்து நிலையம் சுட்டிக்காட்டுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஏன் இவ்வளவு விரைவாக மூட வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் டிஆர் பாலு தவறான தகவலை பதிவு செய்து கொண்டிருந்தார் ஆகவே நான் குறிப்பிட்டேன். கடந்த ஒன்பது நாட்களாக பாராளுமன்ற கூட்டம் நடந்தது. அதில் பல விவாதங்கள் நடைபெற்றது. பாராளுமன்றத்தில் டிஆர் பாலு அவர்கள் என்னிடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டார். அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய பாராளுமன்றத்தில் அமைச்சர் என்ற வகையில் எனக்கு ராமர் கோவில் பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது
தமிழக அரசு எந்த அளவிற்கு தோல்வியுற்ற அரசு என்பதை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் காண்பித்துக் கொண்டிருக்கிறது கோயம்பேடு பேருந்து நிலையத்தை வேகமாக மூட வேண்டும் என்ற நோக்கிடனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட வேண்டும் என்பதை மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதி, அத்தியாவசிய வசதி எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை இதனால் தினம்தோறும் மக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சரியான முறையில் இந்த அரசு செயல்படவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படட்டும், அதே சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனக் கூறினார்.
பாராளுமன்றத்தில் டி ஆர் பாலு பேசிய போது குறிப்பிட்டு பேசுவதன் காரணம் குறித்து கேட்டபோது, பாராளுமன்றத்தில் டி ஆர் பாலு தவறான தகவலை பதிவு செய்து கொண்டிருந்தார், அப்பொழுது நான் குறிப்பிட்டு நீங்கள் தவறான தகவலை பதிவு செய்கிறீர்கள் என கூறியதற்காகத்தான், அவர் என்னிடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டார். ஒட்டுமொத்த அரசியல் பாலிசி. இதுதான் தமிழகத்திலும் அதைத்தான் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள், எனக் கூறினார்.
வெள்ள நிவாரணத்திற்கு விதி வழங்கப்படவில்லை என்று என திமுக அரசு குற்றச்சாட்டு கேட்டபோது, மழை பேரிடர் நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதை முதலில் பயன்படுத்த வேண்டும் என்று தான் பாராளுமன்றத்திலேயே அமைச்சர் சார்பாக கூறப்பட்டது மட்டுமின்றி, மத்திய அரசு அனுப்பிய குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள், என்றார்.
என் மண் என் மக்கள் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, இது 200 வது சட்டமன்ற தொகுதியில் நடக்கும் யாத்திரை இதுவரையில் நடைபெற்ற யாத்திரையில் எங்கும் எந்த பிரச்சனைகளும் இன்றி நடைபெற்றது. இங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் ஏற்றுக்கொண்டு நாங்கள் பொதுக்கூட்டமாக நடத்த இருக்கிறோம் தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்ள இருக்கிறார், எனக் கூறினார்.
0
0