இஸ்லாமிய, கிறிஸ்துவ விழாக்களில் பங்கேற்கும் CM ஸ்டாலின்.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல தயங்குவது ஏன்..? எல்.முருகன் கேள்வி

Author: Babu Lakshmanan
1 September 2022, 2:04 pm

8 வழி சாலை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அமைச்சர் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான நெற்கட்டும் செவலில் இன்று மரியாதை செலுத்துவதற்காக இன்று காலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டடு கொண்டிருக்கின்றது. நேற்று இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் மக்கள் இந்திய மக்கள் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் சில பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார். பண்டிகைகளுக்கு அவர் நேரடியாக போய் அவர்களுடன் கொண்டாடுகிறார்.

விநாயகர் சதுர்த்தி பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகை, ஆனால் அதற்கு வாழ்த்து சொல்ல மனமில்லை. அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் இப்போது அவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மாநிலத்தின் மக்கள் தலைவர், மக்களுடைய பிரதிநிதியாக இருப்பவர், ஒரு பெரும்பான்மையான மக்கள் கொண்டாடக்கூடிய விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லாதது மக்களிடத்தில் மிகப் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எட்டு வழி சாலை திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்த்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அத்தனை பேருக்குமே தெரியும். ஆனால் இன்னைக்கு எட்டு வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சொல்லியிருப்பது வரவேற்கதக்கது. 2047ல் நாட்டின் கட்டமைப்பு உயர்த்தப்படவேண்டும். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி உழைத்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கிறது. ஜெயிலருக்கு பாதுகாப்பில்லை, போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பில்லை. போலீஸ்காரர்கள் வெட்டப்பட்டும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் நகை அணிந்து தனியாக போக முடியலவில்லை. முதியவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா பரந்து விரிந்து கிடக்கிறது. கஞ்சா பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டிய அளவுக்கு தமிழகம் அதன் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

சட்டம், ஒழுங்கு இன்றைக்கு சீர்கெட்டுப் போயிருக்கிறது. தமிழக அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு சட்டம் ஒழுங்கை சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுக்கப்படவேண்டும். குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், அனைத்து வீடுகளிலும் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம்.இந்தியா 8 வருஷத்துல ஒரு சுகாதாரமான இந்தியாவாக மாறி இருக்கிறது. அதே போல் கொரோனா நேரத்தில் மற்ற நாடுகள் இன்று கூட கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் நம் பிரதமர் எடுத்த முடிவின்படி, சரியான முடிவெடுத்தலின் படி மாஸ்க் இல்லாமல் தைரியமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொரோனா கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. இலவசமாக நமக்கு எல்லாருக்கும் ஊசி போடப்பட்டிருக்கிறது. இப்படி பல திட்டங்கள் சொல்லி கொண்டே போகலாம். அவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இந்தியா இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கின்ற பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது, என கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 429

    0

    0